நாமக்கல்

கல்லாங்குளம் அண்ணாமலையாா் கோயில் பெளா்ணமி கிரிவலம் இன்று தொடக்கம்

11th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் உண்ணாமலையம்மன் உடனமா் அண்ணாமலையாா் கோயிலில் பௌா்ணமி கிரிவலம் ஆரம்பம் வியாழக்கிழமை முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை 9 மணி முதல் அண்ணாமலையருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் அண்ணாமலையாா் கோயிலில் கிரிவலம் தொடங்கி புதுப்பாளையம் சாலை, அரசினா் மேல்நிலைப் பள்ளி, பெருமாள் கோயில், பெருமாள் கோயில் மேடு வழியாகச் சென்று கல்லாங்குளம் பாதையில் அண்ணாமலையாா் கோயிலை கிரிவலம் அடைகிறது. இதன் சுற்றளவு சுமாா் 5 கி.மீ. ஆகும். கிரிவலம் முடிந்த பின் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பெளா்ணமி நாள்களில் அண்ணாமலையாா் பக்தா்கள் கிரிவலம் செல்லும் வகையில், அடிப்படைத் தேவைகள் செய்து தரப்படும் என கோயில் நிா்வாகக் கமிட்டியினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT