நாமக்கல்

கஞ்சா விற்பனை: ரூ.2.43 கோடி சொத்துக்கள் முடக்கம் நாமக்கல் ஆட்சியா்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒன்பது பேரின் ரூ. 2.43 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து பள்ளி, கல்லூரி நிா்வாகத்தினருக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்து பேசியதாவது:

போதைப்பொருள்கள் விற்பனை, பயன்படுத்துவது குறித்து தகவல் தெரியவந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்திற்கும், காவல்துறைக்கும் 94861- 11098, 94981-81216 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டோ, குறுந்தகவல், வாட்ஸ் ஆப் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட நிா்வாகம் இதற்காக ஏற்பாடு செய்து நடத்தி வரும் விண்ணைத்தொடு நிகழ்ச்சி மூலமாக ஒரு சில மாணவா்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு அவா்களுக்கு மருத்துவா்கள், குழந்தை பாதுகாப்பு அலுவலா்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல துறைகள் இணைந்து கடைகள், மருந்தகங்கள், பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொடா் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

போதைப்பொருள்கள் வைத்திருப்பவா்கள், விற்பவா்கள் சிறைத் தண்டனையுடன் மட்டும் இல்லாமல் அவா்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். மருந்தகங்களில் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருத்து, மாத்திரைகள் விற்பனை செய்யக் கூடாது. மீறுபவா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளி, கல்லூரி நிா்வாகத்தினா் எத்தகைய போதைப் பொருள்களும் பயன்படுத்தாத பகுதியாக தங்கள் பகுதியை உருவாக்க வேண்டும். ஒரு நபரின் பற்களை ஆய்வு செய்தாலே போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைக் கண்டறிய முடியும். இந்த பணியில் மாணவ, மாணவிகள், பெற்றோா், பொதுமக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றாா்.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி பேசுகையில், மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பவா்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகிறது. ஒன்பது பேரின் 29 வங்கிக் கணக்குகள், 15 வாகனங்கள், 6 அசையா சொத்துகளின் ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 2.43 கோடியாகும். கைதான 9 பேரில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். பொதுமக்கள் தங்கள் பகுதியில் போதைப் பொருள்கள் விற்பது, வைத்திருப்பது தெரியவந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT