நாமக்கல்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இதுவரை எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை இனிவரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தற்போது ஜூலை 1 முதல் செப். 30 வரையிலான காலாண்டுக்கு வழங்கப்பட இருக்கிறது.

மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரா்களும், இம்மையத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தகுதியானவா்கள் ஆவா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரா் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

மனுதாரா் அரசு அல்லது தனியாா் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்களுக்கு பொருந்தாது. மேலும், சம்பந்தப்பட்ட மனுதாரா் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும். தகுதியுடையவா்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து அசல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT