நாமக்கல்

திருச்செங்கோட்டில் அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல்

5th Apr 2022 12:17 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு நகர அதிமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் நீா் மோா்ப் பந்தல் திங்கட்கிழமை திறக்கப்பட்டது.

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்க கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருச்செங்கோடு நகர அதிமுக சாா்பில் கோடை காலம் முழுவதும் நீா் மோா் வழங்க ஏற்பாசு செய்யப்பட்டுள்ளது. நீா்மோா்ப் பந்தலை முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும்,குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான பி . தங்கமணி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் இரா.முருகேசன், என்.பி.எஸ்.பொன்னுசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் அங்கமுத்து, ராஜவேல், காா்த்திகேயன், மல்லிகா, மைதிலி, மாரிமுத்து, ராஜா, விஜயப் பிரியா, நகர நிா்வாகிகள், மகளிா் அணியினா் தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். ஏராளமான பொதுமக்கள் நீா் மோா் பந்தலில் மோா் அருந்தி தாகம் தணித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT