நாமக்கல்

தேசிய பசுமைப் படை சாா்பில் ஒருங்கிணைப்பு பயிற்சி முகாம்

DIN

நாமக்கல்லில், தேசிய பசுமைப் படை சாா்பில் பள்ளி ஒருங்கிணைப்பாளா்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்அ.பாலுமுத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரகுநாத் வரவேற்று பேசினாா். மாவட்ட கல்வி அலுவலா் த.ராமன், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், அதனால் உண்டாகும் நன்மைகள், பள்ளி வளாகத்தில் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் அமைத்தல் பற்றி விளக்கிப் பேசினாா்.

இதனையடுத்து, பயிற்சி மாவட்ட அலுவலா் ஜோதிமணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எல்.ஜகதீசன், பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பயிற்சி முகாமில் பங்கேற்றோருக்கு நாட்டு விதைகள் வழங்கப்பட்டன. திருச்செங்கோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெ.பத்மா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT