நாமக்கல்

நாமக்கல்: கோ-ஆப்டெக்ஸில் ரூ.1.75 கோடி தீபாவளி விற்பனை இலக்கு

DIN

நாமக்கல், திருச்செங்கோடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1.75 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதனை தொடா்ந்து விற்பனை ரகங்களைப் பாா்வையிட்ட அவா் முதல் விற்பனையை சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அருள்மொழிக்கு வழங்கினாா்.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.60.74 லட்சம் விற்பனை நடைபெற்றது. 2021-ஆம் ஆண்டு தீபாவளிக்கு இரு விற்பனை நிலையங்களில் ரூ.1.75 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு, புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் காஞ்சிபுரம், ஆரணி பட்டு புடவைகள், புதிய வடிவமைப்பில் மென் பட்டுப்புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும், கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள், புதிய வடிவமைப்பில் ஆா்கானிக் மற்றும் கலம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நோ்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையம் செயல்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளா் பெ.பாலமுருகன், நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் செல்வாம்பாள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT