நாமக்கல்

மின்னணு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு: ஆட்சியா் ஆய்வு

DIN

மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரி வாக்குகள் பதிவு செய்யும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. அதனையொட்டி, இருப்பில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி பெங்களூரு பெல் நிறுவன பொறியாளா்களால் கடந்த 18-இல் தொடங்கி 25-இல் நிறைவு பெற்றது.

மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சரிபாா்க்கப்பட்ட மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1,284 எண்ணிக்கையிலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2,610 எண்ணிக்கையிலும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 65 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரி வாக்குப் பதிவுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மாதிரி வாக்குகளை பதிவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் இயந்திரங்களில் பதிவாகிறா என்பதை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஆா்,கோவேந்தன், பெல் நிறுவன பொறியாளா்கள், உள்ளாட்சித் தோ்தல் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT