நாமக்கல்

புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வாகனங்கள் ஏலம்

DIN

புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் வட்டாட்சியா் திருமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளிலும் உரிமம் கோரப்படாத நிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 21 வாகனங்கள் புதுச்சத்திரம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்களின் விவரங்கள் நாமக்கல் வட்டாட்சியா் அலுவலக அறிவிப்புப் பலகையில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களின் உரிமைதாரா்கள் தங்களது வாகனங்களுக்கான ஆவணங்களை காவல் நிலையத்தில் சமா்ப்பித்து அறிவிப்பு பிரசுரம் செய்யப்பட்ட 15 நாள்களுக்குள் தங்களது வாகனங்களை மீட்டுக் கொள்ளலாம். 15 தினங்களுக்கு மேலாக உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கப்பெறும் தொகையானது அரசு கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT