நாமக்கல்

பரமத்தி வேலூா் அருகேசெல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

DIN

பரமத்திவேலூா் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமையவுள்ள இடத்தின் உரிமையாளரிடம் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி வேலூா் போலீஸாா், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT