நாமக்கல்

விசைத்தறி தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரிக்கை

20th Jun 2021 02:59 AM

ADVERTISEMENT

பள்ளிபாளையத்தில் கரோனா பாதிப்பால் வேலை இழந்த விசைத்தறி தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி, சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட விசைத்தறி தொழிலாளா் சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் ஒன்றிய தலைவா் அங்கமுத்து தலைமை வகித்தாா். நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விசைத்தறி தொழிலாளா்களுக்கு கரோனா கால நிவாரணமாக ரூ. 4,000 வழங்க வேண்டும். கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவா்களை முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

மகளிா் சுய உதவிக் குழு மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களிடம் தொழிலுக்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். வட்டியை தள்ளுபடி செய்து அரசாணையும் பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் அசோகன், ஒன்றிய குழு செயலாளா் முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT