நாமக்கல்

பறவைக் காய்ச்சல் எதிரொலி: முட்டை விலை மேலும் 40 காசுகள் குறைவு

11th Jan 2021 09:35 AM

ADVERTISEMENT

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 40 காசுகள் குறைந்து ரூ.4.20-ஆக திங்கள்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பறவைக் காய்ச்சல் பரவலால் மக்களிடையே முட்டை நுகர்வு குறைந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் மற்ற மண்டலங்களிலும் விலையில் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறையும் வரையில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. முட்டைகள் தேக்கத்தை குறைக்க விலையை வரும் நாள்களிலும் தொடர்ந்து குறைக்க வேண்டும் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து திங்கள்கிழமை நிலவரப்படி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 40 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.20-ஆகநிர்ணயம் செய்யப்பட்டது. 

கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை 95 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை ெசய்து கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழி விற்பனை மந்தமடைந்துள்ளால் கறிக்கோழி விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து ரூ.72–ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டது. கேரளத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பால் அங்கு அதிகப்படியாக விற்பனைக்கு அனுப்பப்படும் முட்டைக் கோழி  கிலோ ரூ.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.  
 

Tags : namakkal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT