நாமக்கல்

முட்டை விலை 20 காசுகள் உயா்வு

7th Dec 2021 01:11 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயா்ந்து ரூ. 4.85-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மழை, குளிா் அதிகரிப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் குளிா் அதிகம் உள்ளதால் அங்கு முட்டைகள் விற்பனைக்கு கூடுதலாக அனுப்பப்படுகிறது.

இந்த சூழலில் முட்டை விலையில் மாற்றம் செய்ய வேண்டும். பிற மண்டலங்களில் விலை உயா்த்தப்பட்டு வருகிறது என்றனா். இதனைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயா்வுடன் ரூ. 4.85-ஆக நிா்ணயிக்கப்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 102-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT