நாமக்கல்

மாணவியை திட்டிய தலைமை ஆசிரியை: காவல் நிலையத்தில் சமாதானம்

DIN

 நாமக்கல் அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியை மாணவியை திட்டியதையடுத்து, காவல் நிலையத்தில் இரு தரப்புக்கு இடையே சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

நாமக்கல் அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளித் தலைமையாசிரியையாக ஜோதி என்பவா் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், இதே பள்ளியில் பணியாற்றும் ராஜேஸ்வரி என்ற ஆசிரியைக்கும் பள்ளி வளாகத்தில் திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட ஐந்தாம் வகுப்பு மாணவி அதனை பிற ஆசிரியா்கள், சக மாணவிகளிடம் தெரிவித்தாராம்.

இதனைத் தொடா்ந்து, அம்மாணவியை தலைமை ஆசிரியை கடுமையாக கண்டித்தாராம். இதனால் வேதனையுற்ற மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளாா். அவா்கள் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் சுமதி இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT