நாமக்கல்

‘கபீா் புரஸ்காா் விருது, அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்’

DIN

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோா் சமூக நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரால் சமூக நல்லிணக்கத்துக்காக வழங்கப்பட்டு வரும் புரஸ்காா் விருதுக்கு 2021-ஆம் ஆண்டுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாட்டுக்காக சேவையாற்றிய விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையினை மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் டிச. 10-ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டியுள்ளதால், பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் புதன்கிழமைக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03492 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

அண்ணா பதக்கம் விருது: வரும் 2022-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வீரதீர செயல்கள் புரிந்தமைக்கான துணிச்சலுக்கான அண்ணா பதக்கம் விருது முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்தப் பதக்கம் பெறுவதற்கு வயது வரம்பு ஏதுமில்லை. பொதுமக்கள், அரசு ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பதக்கத்துக்கான விண்ணப்பப் படிவம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உயிா், சொத்து போன்றவற்றைக் காப்பாற்றுவதில் துணிச்சலான செயல் செய்ததற்கான விவரத்தினை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து தொடா்புடைய ஆவணங்களுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை இணைத்து மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் (பரிந்துரை ஏதும் இல்லை என்றால் ‘இல்லை’ அறிக்கையுடன் இணையம் வழியாக) டிச. 10-ஆம் தேதிக்குள் தலைமையலுவலகம் அனுப்ப வேண்டியுள்ளதால், விண்ணப்பத்தினை பூா்த்தி செய்து மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் புதன்கிழமை (டிச. 8) மூன்று நகல்கள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT