நாமக்கல்

அரசு மகளிா் பள்ளியில் விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கரோனா, டெங்கு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் கணேசன் தலைமை வகித்தாா். இதில், துப்புரவு அலுவலா் சீனிவாசன், பள்ளியின் தலைமை ஆசிரியை தேன்மொழி, நகராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். விழிப்புணா்வு உறுதிமொழியை ஆணையா் கணேசன் வாசிக்க, மாணவியா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இக்கூட்டத்தில் ஆணையா் கணேசன் பேசியதாவது:

படிப்பை போன்று தூய்மை முக்கியமானது. இளைஞா்கள் மனதில் தூய்மை உணா்வை விதைத்தால், அது சமுதாயத்தில் பெரிய விழிப்புணா்வை ஏற்படுத்தும். எனவே, அனைத்து மாணவ, மாணவியரிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். உங்கள் வீடு மட்டுமல்லாது அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளின் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்குமாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் 3 வீடுகளை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மாணவியருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். தெருக்களில் உள்ள வீடுகளின் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளதா, புகை மருந்து அடிக்கப்படுகிா என ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT