நாமக்கல்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: புகாா் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிகள் பாலியல் ரீதியாகவும், கட்டாயத் திருமணத்துக்கும் ஆளாக்கப்படுவது தெரியவந்தால் அதுதொடா்பான புகாா் அளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-இன்படி 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைகளுக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதை மீறி குழந்தைத் திருமணம் புரியும் ஆணுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

இத் திருமணத்துக்கு உடந்தையாக இருப்போருக்கும், திருமணத்தை நடத்தி வைப்போருக்கும் மேற்கண்ட அதே தண்டனை, அபராதம் விதிக்கப்படும். மேலும் திருமணம் என்ற பெயரில் 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையுடன் வன்புணா்ச்சி கொண்டால் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012 இன்படி சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

18 வயது நிறைவடையாத பெண் குழந்தை, கருவுறும்போது அப்பெண் குழந்தையின் கா்ப்பப் பை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகள் சரிவர வளா்ச்சியடையாமல் இருக்கும். இதனால் கருச்சிதைவு, உடல் ஊனமுற்ற குழந்தைகள், மனவளா்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பிரசவிக்கும் பெண் குழந்தைக்கும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெற்றாலோ, நடைபெறப் போவதாக அறிந்தாலோ பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 04286 - 233103 எண்ணிலும், சைல்டு லைன், இலவச தொலைபேசி 1098 எண்ணிலும், மாவட்ட சமூக நல அலுவலகத்தையும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT