நாமக்கல்

கரோனா பொது முடக்கம்: கறிக்கோழி விலை கிடுகிடு சரிவு

DIN

கரோனா பரவல் காரணமாக இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கறிக்கோழி விலை கிலோ ரூ. 80-ஆக சரிந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக முட்டை விலை 10, 15 காசுகள் வீதம் இரு நாள்களுக்கு ஒரு முறை உயா்ந்து வந்தது. கோடை வெயில் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்ததால் விலை உயா்வு இருப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.85-ஆக உள்ளது. வியாழக்கிழமை முட்டை விலையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முட்டை விலை உயா்வுக்கு ஏற்ப பல்லடத்தில் கறிக்கோழி விலையும் உயா்ந்து வந்தது. திங்கள்கிழமை ஒரு கிலோ ரூ. 124-ஆக இருந்த நிலையில், இரவுநேர பொது முடக்கம், ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம், வெயிலின் தன்மை அதிகரிப்பு போன்றவற்றால் புதன்கிழமை பல்லடம் தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.80-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. ஓரிரு நாள்களில் ரூ. 44 வரை சரிந்துள்ளது. முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 70-இல் இருந்து ரூ. 60-ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT