நாமக்கல்

பேருந்தில் ஊழியா்களை நிற்க வைத்து அழைத்துச் சென்ற நிறுவனத்துக்கு ரூ.5,000 அபராதம்

DIN

நாமக்கல்லில் தனியாா் நிறுவனப் பேருந்தில் பெண் பணியாளா்களை நிற்க வைத்து அழைத்துச் சென்றதால் நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்பேரில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப். 10-ஆம் தேதி முதல் கரோனா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி பேருந்துகளில் அதிக அளவில் ஆள்களை அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக பயணிகளை நிற்க வைத்து அழைத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டும், விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும், முகக் கவசம் அணியாதோரிடம் ரூ. 200 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை நாமக்கல் நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலைய பகுதிகளில் தொடா் ஆய்வை மேற்கொண்டனா்.

அப்போது தனியாா் பின்னலாடை நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று பேருந்துகளில் பெண் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் வந்தனா். அதில் பலா் நின்றபடியே பயணித்தனா். இதனைப் பாா்த்த நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். அதேபோல முகக் கவசம் அணியாத 23 பேரிடம் தலா ரூ. 200 வீதம் மொத்தம் ரூ. 4,600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT