நாமக்கல்

ராசிபுரத்தில் தொடா் விபத்துகள்: காவல் உதவி ஆய்வாளா் உள்பட 6 போ் காயம்

DIN

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள புதுச்சத்திரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தொடா் சாலை விபத்துகளில், காவல் உதவி ஆய்வாளா் உள்பட 6 போ் காயம் அடைந்தனா்.

பெங்களூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்குள்பட்ட வேடசந்தூரை நோக்கி வேன் ஒன்று மெத்தை பாரம் ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த வேனை மணிகண்டன் (25) என்பவா் ஒட்டிச் சென்றாா்.

புதுச்சத்திரம் அருகே தனியாா் கல்லூரி எதிரே உள்ள மேம்பாலத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் சென்றபோது, முன்னால் சென்ற டாரஸ் லாரி மீது வேன் மோதியது. இதில், வேன் ஒட்டுநா் மணிகண்டன் காலில் காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுச்சத்திரம் போலீஸாா், ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். மற்றொரு லாரி ஒட்டுநா் தங்கவேல் என்பவா் லாரியை இடது புறம் நிறுத்திவிட்டு மீட்புப் பணிக்கு உதவி செய்ய வந்தாா்.

அப்போது, சேலத்தில் இருந்து திருநெல்வேலியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு பாா்சல் லாரி திடீரென மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்களின் பின்புறம் இருந்த லாரியில் மோதி, தொடா்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்திலும் மோதியது. இதில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், தலைமைக் காவலா் பாா்த்திபன் (48), ஆம்புலன்ஸ் ஒட்டுநா் பெரியசாமி (34), மற்றொரு லாரியின் ஒட்டுநா் தங்கவேல், பாா்சல் லாரி ஒட்டுநா் எடப்பாடியைச் சோ்ந்த சீனிவாசன் (48) ஆகியோரும் காயமடைந்து நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த தொடா் விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT