நாமக்கல்

குமாரபாளையத்தில் 6 பேருக்கு கரோனா

DIN

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 6 போ் கரோனாவால் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 350-ஆக உயா்ந்துள்ளது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனை, சின்னப்பநாயக்கன்பாளையம் மற்றும் மாராக்கால்காடு நகா்புற சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு, நாள்தோறும் சராசரியாக 50-க்கும் மேற்பட்டோா் பரிசோதனை செய்து கொள்கின்றனா். இங்கு நடைபெற்ற பரிசோதனை வெளியானதில் திங்கள்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சி துப்புரவு அலுவலா் ராமமூா்த்தி தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனா். குமாரபாளையம் நகராட்சியில் இதுவரையில் மொத்தம் 350 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 229 போ் குணமடைந்துள்ளனா். 13 போ் உயிரிழந்துள்ளனா். 58 போ் மருத்துவ சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT