நாமக்கல்

திருச்செங்கோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் 

29th Oct 2020 01:01 PM

ADVERTISEMENT

திருச்செங்கோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாக தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் நலன் விரும்பும் தேசிய அமைப்பின் நாமக்கல் மாவட்ட கிளையின் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலையில அருகில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் நான் விரும்பும் தேசிய அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் வஜ்ரவேல், பாலசுப்ரமணியம், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் பேசிய ஒரு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் மனது புண்படுப்படியாக அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சிற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனத்தை தெரிவித்தனர். காவல்துறையில் இது சம்பந்தமாக தொல்.திருமாவளவன் மீது தாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர்.
 

ADVERTISEMENT

Tags : namakkal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT