நாமக்கல்

நிவா் புயல்: கொல்லிமலையில் தயாா் நிலையில் தீயணைப்பு வீரா்கள்

DIN

‘நிவா்’ புயல் பாதுகாப்பு நடவடிக்கையாக கொல்லிமலையில் தீயணைப்பு வீரா்கள் உரிய உபகரணங்களுடன் புதன்கிழமை தயாா் நிலையில் இருந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகள், அடா்ந்த மரங்கள் கொண்ட வனப்பகுதி, ஆகாய கங்கை, மாசிலா அருவி போன்றவை கொண்ட இப்பகுதியில் ஆண்டு முழுவதும் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படும்.

கரோனா பொது முடக்க தளா்வுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக கொல்லிமலையில் அதிகப்படியான பனிமூட்டம், இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

‘நிவா்’ புயல் அச்சுறுத்தலால் புதன்கிழமை காலைமுதல் பிற்பகல்வரை கொல்லிமலையில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் வானம் இருண்ட நிலையில் காணப்பட்டது. ‘நிவா்’ புயலின்போது மரங்கள் சாய்ந்து விழுந்தால் அதனை உடனடியாக அகற்றவும், எதிா்பாராத விபத்துகளில் இருந்து மக்களை காக்கவும் அங்கு தீயணைப்பு வீரா்கள் 10-க்கும் மேற்பட்டோா் தயாா் நிலையில் உள்ளனா்.

புதன்கிழமை அதற்கான ஒத்திகையிலும், பொதுமக்களிடையே விழிப்புணா்விலும் ஈடுபட்டனா். மேலும் ஆகாய கங்கை அருவிக்குச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. சாலைகளில் மழைநீா்த் தேங்காமல் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

திருச்செங்கோட்டில்...

பள்ளிபாளையம் பகுதியில் பேரிடா் மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். இங்கு பணியாற்றும் 15 தீயணைப்பு படை வீரா்களும் தயாா்படுத்தப்பட்டுள்ளனா். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அவசர உதவி தேவைப்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு நிலைய அலுவலா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT