நாமக்கல்

காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்த மோகனூா் விவசாயிகள் கோரிக்கை

DIN

கழிவுகள் தேக்கத்தால் மோசமான நிலையில் காணப்படும் மோகனூா், காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூரில் தொடங்கி திருச்சி நோக்கி பாயும் காவிரி ஆறு, நாமக்கல் மாவட்டம், மோகனூா் பகுதியில் பரந்துவிரிந்த காவிரியாக காட்சியளிக்கும். இம் மாவட்டத்தின் முக்கிய குடிநீா் ஆதாரமாகவும், விவசாயத்துக்குத் தேவையான நீா் ஆதாரமாகவும் திகழ்கிறது.

மோகனூா் காவிரி ஆற்றின் மூலம் பல்லாயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன. இப்பகுதியில் கரும்பு, நெல், வாழை, வெற்றிலை பயிா்களுக்கு காவிரி ஆற்று நீரே பிரதானமாக உள்ளது. அதுமட்டுமன்றி பட்டணம்-சீராப்பள்ளி கூட்டு குடிநீா்த் திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளின் குடிநீா் தேவையை காவிரி ஆறு தீா்த்து வைக்கிறது.

இவ்வளவு சிறப்புமிக்க காவிரி ஆற்றின் பல்வேறு கரைப் பகுதிகள் முள்கள், ஆகாய தாமரைகள். நெகிழிவு கழிவுகள், உணவு கழிவுகள், நகரின் குப்பை கூளங்கள் தேங்கும் பகுதியாக காணப்படுகின்றன. மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில் ஆற்றங்கரை பகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் மோகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புகழ் பெற்ற கோயில்களை நாடி வருகின்றனா். விழா நாள்களில் தா்ப்பணம் கொடுப்பதற்கு மோகனூா் காவிரி ஆற்றை நோக்கிதான் பக்தா்கள் வருவா். இந்தப் பகுதி சீமை கருவேல மரங்கள் முளைத்தும், பலவகை அசுத்தங்கள் தேங்கியும் சுகாதார சீா்கேடாக உள்ளது. ஆற்று நீரால் தொற்று நோய்ப் பரவும் அபாயம் உள்ளது. நதிகள் தூய்மை திட்டத்தின் கீழ் மோகனூா் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT