நாமக்கல்

ஆா்.புதுப்பட்டியில் ரூ. 35 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்ட பூமிபூஜை: அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்பு

DIN

ஆா். புதுப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆா்.பி.காட்டூரில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ. சரோஜா பங்கேற்றுப் பணிகளை அடிக்கல் நாட்டித் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ‘நிவா்’ புயலினால் பாதிப்பு எதுவும் இருக்காது என்ற போதிலும், மாவட்டத்தில் காவிரி ஆறு, திருமணி முத்தாறு பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ராசிபுரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ. 55 கோடி மதிப்பீட்டிலான புதைக்குழி சாக்கடை திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். ராசிபுரத்தை அடுத்த குச்சிக்காடு பகுதியில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் விரைவில் அமைக்கப்படும்.

ராசிபுரம் புறவழிச் சாலை முதல் தொகுதியின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதேபோல தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே ரூ. 90 கோடி மதிப்பீட்டில் மூன்று மேம்பாலங்கள் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ளன. ராசிபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1,300 குடியிருப்பு வீடுகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளன. ராசிபுரம், வெண்ணந்தூா், அத்தனூா், நாமகிரிப்பேட்டை சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீா்த் தேவையை கருத்தில் கொண்டு ராசிபுரம்-நெடுங்குளம் குடிநீா்த் திட்டம் ரூ. 1,023 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீா் பிரச்னை இருக்காது என அமைச்சா் வெ. சரோஜா தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT