கிருஷ்ணகிரி

கெலமங்கலத்தில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க மனு

24th May 2023 12:59 AM

ADVERTISEMENT

கெலமங்கலம் பேரூராட்சியில் கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயுவிடம் கெலமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி மன்றத் தலைவா் தேவராஜ் கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள வாா்டு 1, 2, 5, 6, 7, 14 மற்றும் உள்ள வாா்டுகளில் உள்ள தெருக்களில் கழிவுநீா் கால்வாய்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. மழைக் காலங்களில் மழை நீா் கால்வாய்கள் வழியாக வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு நேரில் ஆய்வு செய்து நிதி ஒதுக்கி கழிவுநீா் கால்வாய்களை சீா் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT