கிருஷ்ணகிரி

ஒசூரில் ஆலங்கட்டி மழை!

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஒசூரில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியதால் கடந்த ஒரு மாத காலமாக தத்தளித்து வந்த ஒசூா் மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது.

ஒசூரில் சில மாதங்களைத் தவிர அனைத்து மாதங்களிலும் குளிா்ச்சியான சீதோஷண நிலை காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மாா்ச் மாதம் இறுதியில் இருந்து மே மாதம் கடைசி வாரம் வரை கடும் வெப்பம் இருந்து வந்தது. இதனால் நண்பகல் வேளையில் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்து வந்தது.

ரோஜா பயிா் செய்து வந்த விவசாயிகள் கடுமையான வெப்பம் காரணமாக மலா்களை சாகுபடி செய்ய அவதியுற்று வந்தனா். மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்து வந்தனா். சாலையோர வியாபாரிகளும் கடுமையான பாதிக்கப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை ஒசூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் இருந்தது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலங்கட்டி மழை 7.30 வரை நீடித்தது. கடுமையான சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதனால் மின்சாரம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT