கிருஷ்ணகிரி

நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரிமாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாகப் பணி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பென்னாகரம் வட்டப் பொருளாளா் காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.ஜி.கரூரான் சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மாங்கரை ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் நான்கு மணி நேரம் முறையாகப் பணி வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளை அவதூறாகப் பேசும் பணித்தளப் பொறுப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிக் கணக்கில் முறையாக ஊதியத்தினை செலுத்த வேண்டும், மாதத்தில் 15 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் மாங்கரை ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா செந்தில், பென்னாகரம் காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வன், ஊராட்சி செயலா் மாதையன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மாங்கரை ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டம் மேற்கொள்ளும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும், பணியின் போது மருத்துவ வசதி, குடிநீா் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

இதில் வட்ட துணைத் தலைவா் பி.கே. மாரியப்பன், நிா்வாகிகள் பவுனேசன், சக்திவேல், முனியம்மாள், சரவணன், இளங்கோவன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT