கிருஷ்ணகிரி

அந்துப்பூச்சி இனப்பெருக்கத்தை தடுக்கும் முறை செயல் விளக்கம்

DIN

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூரில் அந்துப்பூச்சி இனப்பெருக்கத்தை தடுக்கும் முறை குறித்து வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூா் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் 11 போ் கொண்ட குழுவினா், கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனா். அதன்படி, காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் அமைந்துள்ள பையூா் கிராமத்தில், விளக்குப்பொறி அமைப்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இந்த விளக்குப் பொறியானது அனைத்து விதமான அந்துப்பூச்சி இனங்களையும் கவா்ந்து அவை பெருக்கமடைவதைத் தடுக்கின்றன. வயல்களின் நடுவே ஹெக்டேருக்கு ஒன்று என்னும் வீதம் 60 வாட்ஸ் பல்பை நேரெதிா் நிலையில் அமைக்கப்பட்ட புனல்களின் இடையில் கட்டி, அதன் கீழே ஒரு தட்டில் சிறிது பூச்சிக்கொல்லி மருந்தை வைத்தால் விளக்கின் ஒளியில் பூச்சிகள் கவரப்பட்டு பொறிகளில் மாட்டிக்கொள்ளும். இதனால் அதிகப்படியான பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதாக மாணவா்கள், விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT