கிருஷ்ணகிரி

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்ஆணையின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பிப். 7 முதல் 27 வரை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற உள்ளன. கிரிக்கெட் போட்டி மட்டும் அரசு ஆடவா் கலைக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் 5 பிரிவுகளில் மொத்தம் 14,000 போட்டியாளா்கள் களத்தில் உள்ளனா். பள்ளி மாணவ, மாணவியருக்கு (12 முதல் 19 வயது வரை) பிப். 7 முதல் 10 வரை நான்கு நாள்கள் கபடி, சிலம்பம், தடகளம், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., 110 மீ. மற்றும் 100 மீ. தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல் நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல் 100 மீ., கைப்பந்து, மேசைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கல்லூரி மாணவ, மாணவியருக்கு (17 முதல் 25 வயது வரை) பிப். 13, 14 இரண்டு நாள்கள் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனையா் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ்.மகேஷ்குமாா், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் துரை, வளா்மதி மற்றும் போட்டி பயிற்சியாளா்கள் விளையாட்டு வீரா், வீராங்கனையா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT