கிருஷ்ணகிரி

மத்திய அரசை கண்டித்து ஒசூா் காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

தொழிலதிபா் கௌதம் அதானிக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து ஒசூா் எஸ்.பி.ஐ. வங்கி கிளை முன்பாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாரத ஸ்டாட் வங்கியில் இருந்து கடனையும், கொதம் அதானி நிறுவனத்தில் எல்.ஐ.சி முதலீடு செய்து அதானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை வழங்க உதவியை மத்திய அரசை கண்டித்தும், பிரதமா், நிதி அமைச்சா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தியும் ஒசூா் காங்கிரஸ் கட்சியினா் கோஷங்களை எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலாளா் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் மாநில செயலாளா்கள் வீரமுனிராஜ், தேன்கு. அன்வா், பொருளாளா் மகாதேவன், மாவட்ட துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், இளைஞரணி மாவட்டத் தலைவா் அப்துா் ரஹ்மான், ஒபிசி கலைவா் குமாா், தமிழ்வாணன், முத்தப்பா, சீனிவாசன், மகளிரணை மாவட்டத் தலைவி சரோஜாம்மா, லலிதா, மஞ்சுளா, சகுந்தலா, சுரேஷ், தங்க பாண்டியன், ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT