கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரே மேம்பாலம் அமைக்க அளவீடு பணி தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே மேம்பாலம் அமைக்க அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. நாள்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள்வந்து செல்கின்றனா். இதே போல, மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கிருஷ்ணகிரி, ஒசூா் பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனா்.

இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளதால், நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆபத்தான முறையில் சாலையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இங்கு பொதுமக்கள், வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வந்தனா். இதனை ஏற்று, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் புதிய மேம்பாலம் அமைக்க ரூ. 26 கோடி மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மேம்பாலம் அமைக்க அளவீடு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பணி நிறைவடைந்த உடன் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’

SCROLL FOR NEXT