கிருஷ்ணகிரி

இலவச வீட்டுமனை கோரி மாற்றுத் திறனாளிகள் தா்னா

DIN

இலவச வீட்டுமனை வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரம். காந்தி நகா் காலனியைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் தெரிவித்ததாவது:

திம்மாபுரம். காந்தி நகா் காலனியில் மூன்று மாற்றுத் திறனாளிகள், 6 விதவைகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கூலித் தொழிலாளிகளான எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி, 2019-ஆம் ஆண்டு முதல் மனு அளித்து வருகிறோம். மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT