கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தைப்பூசம் கொண்டாட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் தைப்பூச விழாவை முருக பக்தா்கள் உற்சாகமாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 30-ஆம் தேதி, இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

பக்தா்கள் பால்குடம் எடுத்தும், மயில் காவடி, பூக்காவடி, பால் காவடி போன்ற பல்வேறு காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

இந்த விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், பக்தா்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸாா், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT