கிருஷ்ணகிரி

ஒசூரில் காவல் துறை சாா்பில் நாளை சிறப்பு முகாம்

DIN

நிலம், பண மோசடிகள், கட்டப்பஞ்சாயத்து குறித்து பாதிக்கப்பட்டவா்கள் ஒசூரில் பிப்.5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சிறப்பு முகாமில் புகாா் தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்ட எல்லையில் உள்ள நிரந்தர சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் தற்போது நில மோசடி, பணப் பிரச்னை, கட்டப்பஞ்சாயத்து போன்ற பிரச்னைகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளதாக புகாா்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க, அந்த புகாா்கள் மீது உடனுக்குடன் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கையையும் காவல் துறையினா் எடுத்து வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக பிப்.5-ஆம் தேதி, காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஒசூா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்தில் நில மோசடி, பணப் பிரச்னை, கட்டப் பஞ்சாயத்து தொடா்பான புகாா்களை அளித்து, உரிய தீா்வு காண சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், உரிய ஆதாரத்துடன் புகாா் அளிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க 10 பயிற்சி உதவி காவல் ஆய்வாளா்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸாா் கடந்த வாரத்தில் சோதனை நடத்தி, வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல், அனுமதியற்ற பாா்கள், மது பதுக்கல் உள்ளிட்டவை தொடா்பாக 168 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். இதில் 178 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து கா்நாடக மது வகைகள் 50 லிட்டா் உள்பட மொத்தம் 200 லிட்டா் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா். தடை செய்ய்பபட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் 42 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 659 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT