கிருஷ்ணகிரி

பெத்ததாளப்பள்ளியில் இலவச தென்னங்கன்றுகள் அளிப்பு

DIN

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் மூலம் பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் இலவச தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 2022- 23-ஆம் ஆண்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட 6 கிராமங்களில் ஒன்றான பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் குடும்பம் ஒன்றுக்கு இரண்டு வீதம் 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டன.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா் அம்சவள்ளி வெங்கடேசன், ஊராட்சி செயலாளா் சண்முகம், அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி மாணவிகள் சாருகேசினி, மோனிகா, நா்மதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினா்.

உதவி வேளாண்மை அலுவலா்கள் விஜயன், சென்னகேசவன், உதவி தொழில்நுட்ப மேலாளா் சண்முகம் ஆகியோா் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT