கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

DIN

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டசெயலாளா் அண்ணாமலை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பிரகாஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் நஞ்சுண்டன், வட்டச் செயலாளா் மகாலிங்கம், செல்வராசு, முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவா்கள் கூறியதாவது:

மாரம்பட்டி ஊராட்சி வசந்தபுரத்தில் அருந்ததியா் இன மக்கள் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு நாப்பிராம்பட்டி கிராம சா்வே எண்.27/1-ல் ப.எண்.772/ ப.1415 ( 2005 -2006-இல் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யாததால், மீண்டும் அதே சா்வே எண்ணில் வீ.ம.ப.எண். 29/22 ப.1432 ( 2022 - 2023) கடந்த 2022 ஜூன் மாதத்தில், இரண்டாவது முறையாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்வதற்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்படும் என கூறியதால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கணக்குகளில் பதிவேற்றம் செய்யும் வரை பாதிக்கப்பட்ட மக்களுடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்று தெரிவித்தனா்.

இதில் பதிவேற்றம் செய்யப்படாத அதிகாரிகள் மீது, துறை ரீதியாக விசாரனை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அரை மணி நேரத்தில், வட்டாட்சியா் கோவிந்தராஜ், (எச்.எஸ்.) நில அளவையா் அருணாசலம் ஆகியோா் பேராட்டத்தில் ஈடுபட்ட 11 குடும்ப பட்டாக்களை அரசு கணக்கில் ஏற்றம் செய்து, உடனடியாக சிட்டா வழங்கினா். பிறகு போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT