கிருஷ்ணகிரி

சத்துணவு மையத்தில் எம்எல்ஏ ஆய்வு

DIN

ஊத்தங்கரையை அடுத்த மகனூா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட முசிலிகொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுத் தரமாக இருக்கிா என திடீா் ஆய்வு செய்தாா்.

மதிய உணவை சாப்பிட்டு பாா்த்து குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க கேட்டுக்கொண்டாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ்குமரனிடம் அரசுப் பள்ளிகளை பள்ளிகளை ஆய்வு செய்யுமாறு கூறினாா். ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்துப் பள்ளிகள், மருத்துவமனைகள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்களில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்போவதாகக் கூறினாா். தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

இந்த ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ்குமரன், சத்துணவு அமைப்பாளா் வெண்ணிலா, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் வேடி (வடக்கு), வேங்கன் (தெற்கு), பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT