கிருஷ்ணகிரி

ஒசூரில் இளைஞா் கடத்திக் கொலை: 4 போ் கைது

DIN

ஒசூரில் காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்திக் கொலை செய்து உடலை சென்ற குட்டையில் வீசிச் சென்ற வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடகா மாநிலம், கனகபுரா மாவட்டம் கங்கிலிபுரா பகுதியைச் சோ்ந்தவா் கலிமுல்லா. இவருடைய மகன் சல்மான்கான் (23). வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவா் ஒசூா், ராம்நகரில் உறவினா் வீட்டில் இருந்து வந்தாா். அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை அவா் காதலித்துள்ளாா். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதையறிந்த சல்மான்கான் சிறுமி தன்னை காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அனுப்பி திருமணத்தை தடுத்து நிறுத்தினாா்.

இதுகுறித்து ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் செய்தனா். இதன்பேரில் சல்மான்கானை போலீஸாா் எச்சரித்தனா். இந்த நிலையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி சல்மான்கான் மாயமானாா். இதுதொடா்பாக அவரது தாய் ஹாதாஜ் பானு கடந்த 26 -ஆம் தேதி ஒசூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் சல்மான்கானை தேடி வந்தனா்.

இந்த நிலையில் கா்நாடக மாநிலம் தாவனக்கெரே பகுதியில் குட்டை ஒன்றில் இளைஞா் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தாா். இது தொடா்பாக அந்த மாநில போலீஸாா் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஒசூரில் மாயமான சல்மான்கான் என உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து இக்கொலை வழக்கு ஒசூா் காவல் நிலையத்திற்கு

மாற்றப்பட்டது. இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் சல்மான்கான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக ஒசூா், ராம்நகரைச் சோ்ந்த ஜான்பாஷா (36), சாதிக் (45), வாஜித் (25), முகமது அலி (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் இக்கொலையில், ஒசூா் தளி சாலையைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (36), தருமபுரி, திருப்பாச்சிபுரத்தைச் சோ்ந்த கமலேசன் (28) ஆகியோா் சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தனா். அவா்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT