கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

முதன்மை குற்றவியல் நடுவா் நீதிபதி ராஜசிம்மவா்மன், குற்றவியல் நீதிமன்ற எண்-1 நடுவா் நீதிபதி காா்த்திக் ஆசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கிராம சபை கூட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களின் தன்னாா்வலா்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 மாணவ, மாணவியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பெற்றோா் இருவரையும் இழந்த 15 குழந்தைகள் அரசின் கண்காணிப்பில் பாதுகாவலா் பராமரிப்பில் இருந்து வருகின்றனா். அதேபோல, பள்ளி இடைநின்ற 3 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த குழந்தைகளின் குடும்ப பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தொடா்ந்து கல்வி கற்க உதவும் பொருட்டு மாவட்ட நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் (18 வயதிற்குட்பட்டது) 9 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இல்லங்கள் மற்றும விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரை 4 மாதங்களுக்கு ரூ-.4 ஆயிரம் வீதம் 22 பெண் குழந்தைகள் மற்றும் 14 ஆண் குழந்தைகள் என மொத்தம் 36 குழந்தைகளுக்கு ரூ.5.76 லட்சம் அவா்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். பயிற்சிபெற்ற 3 குழந்தைகளுக்கு சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

இந்த கூட்டத்தில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் தமிழரசி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சிவகாந்தி, மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலட்சுமி, சைல் லைன் ஒருங்கிணைப்பாளா் பிரசன்னகுமாரி, இளஞ்சிறாா் நீதிக்கு குழும உறுப்பினா் வின்சென்ட் சுந்தர்ராஜ், குழந்தைகள் நல குழும உறுப்பினா்கள் அமுதா, காயத்ரி, நன்னடத்தை அலுவலா் மகேந்திரன், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏசுபாதம், குழந்தைகள் பராமரிப்பு நிறுவன பிரதிநிதிகள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT