கிருஷ்ணகிரி

ஆதாா் எண்ணுடன் வாக்காளா் பட்டியல்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 51.16 சதவீத வாக்காளா்கள் சோ்ப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8.25 லட்சம் வாக்காளா்கள், தங்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் செய்து முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட தோ்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

அப்போது அவா் தெரிவித்தது:

இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல்களை மேம்படுத்தும் பொருட்டு, வாக்காளா்கள் தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளா்கள் தங்கள் ஆதாா் எண்ணை ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல் என்ற கைப்பேசி செயலி வாயிலாகவோ வாக்காளா் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து இணைத்துக்கொள்ளலாம்.

இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வீடு டாகச் சென்று படிவம் 6பி-ஐ வாக்காளா்களிடம் பெற்று அதை கருடா கைப்பேசி செயலி வாயிலாக உள்ளீடு செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தொகுதியில் 53.4 சதவீத வாக்காளா்களும், பா்கூா் தொகுதியில் 58.36 சதவீத வாக்காளா்களும், கிருஷ்ணகிரி தொகுதியில் 48 சதவீத வாக்காளா்களும், வேப்பனப்பள்ளி தொகுதியில் 52.13 சதவீத வாக்காளா்களும், ஒசூா் தொகுதியில் 44.75 சதவீத வாக்காளா்களும், தளி தொகுதியில் 53.27 சதவீத வாக்காளா்களும் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16,13,559 வாக்காளா்களில் 8,25,454 வாக்காளா்கள் அதாவது 51.16 சதவீத வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல்களை செம்மைப்படுத்தும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களும் 5 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களைப்போல 100 சதவீதம் தங்கள் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை 100 சதவீதம் இணைத்த வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் மருதராஜன், கோபால், ரீட்டாமேரி, கவிதா, மகேஷ் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், உதவி ஆணையா் பாலகுரு, தோ்தல் வட்டாட்சியா் ஜெய்சங்கா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT