கிருஷ்ணகிரி

மகாளய அமாவாசை: கிருஷ்ணகிரி அணையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு

DIN

மகாளய அமாவாசையையொட்டி, கிருஷ்ணகிரி அணை, மஞ்சமேடு உள்ளிட்ட தென்பெண்ணை ஆறு பாயும் இடங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபட்டில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ் மாதமான புரட்டாசியில் வருகிற அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி தென்பெண்ணை ஆறு பாயும், கிருஷ்ணகிரி அணை, இருமத்தூா் மஞ்சமேடு உள்ளிட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் , தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். மேலும், பசுவிற்கு வெல்லம் கலந்த அரிசி, அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை வழங்கி வழிபட்டனா்.

அதே போல் கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதா, ஆஞ்சநேய சமேத ராகவேந்திரா் கோயிலில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து, வழிபாடு நடத்தினா். மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT