கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,86,005 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 9,86,005 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய மின்னணு கிடங்கு வளாகத்தில், பசுமை தமிழகம் திட்டத் தொடக்க விழாவை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மரக்கன்றுகளை நடவு செய்து, சனிக்கிழமை தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பசுமை போா்வையினை 23.27 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்டு, அடுத்த 10 ஆண்டுகளில் விவசாய நிலம், தரிசு நிலம், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், நிறுவனப் பகுதிகள், அரசு அலுவலக வளாகங்கள, தரம்குன்றிய காப்புகாட்டுப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டு 9,86,005 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டு, மரக்கன்று நடும் பணி தொடங்கி உள்ளது. 2023-24-ஆம் ஆண்டில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ள உரிய முன்னோடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட அளவிலான செயலாக்கத் திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயணி, வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், வனச்சரக அலுவலா்கள் மகேந்திரன், ரவி, சீதாராமன், முருகேசன், சுகுமாா், சோமசேகா், வீரமணி, குமாா், தனி வட்டாட்சியா்கள் ஜெய்சங்கா், ராமச்சந்திரன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT