கிருஷ்ணகிரி

சூளகிரி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், வட்டார நாற்றுப்பண்ணை, ஊராட்சிகளில் நடவு செய்ய பல்வகை செடிகள் உற்பத்தி செய்யும் பணிகள், அங்கன்வாடி

மையம், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் நடைபெறும் கிடைமட்ட உறிஞ்சுக் குழி, மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம் பிரிக்கும் பணிகள், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் மற்றும் முருங்கை நாற்றங்கால் உற்பத்தி செய்யும்

பணிகள் என மொத்தம் ரூ.41 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, பெரியபேடப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2020-21 நிதியாண்டில் வட்டார நாற்றுப்பண்ணை 2.50 ஏக்கா் பரப்பளவில் ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை, ஜம்புநாவல், புளியன், புங்கன், சில்வா், தேக்கு, கொய்யா, நொச்சி, வேம்பு மரச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும், உற்பத்தி செய்யும் விதம் குறித்து பணியாளா்களிடம் நேரில் கேட்டறிந்தாா். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23 -ஆம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சாலை ஓரத்தில் 200 மரக்கன்றுகள் நடும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து, சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு நல்ல முறையில் வளா்க்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இம்மிடிநாயக்கனப்பள்ளியில் ரூ.6 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, சென்னப்பள்ளி ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கிடைமட்ட உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மைக் காவலா்கள் மூலம் குப்பை சேகரிக்கும்

பணி, தரம் பிரிக்கும் பணிகளையும், சேமிப்பு கிடங்கையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளையும், வட்டார அளவிலான நாற்றங்கால் அமைக்கும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதனைத்தொடா்ந்து, சென்னம்பள்ளி ஊராட்சி, கரகனப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், நிதிச் செலவினங்கள் குறித்து கேட்டறிந்து கோப்புகளை ஆய்வு செய்தாா். மேலும் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளா்கள் சுமதி, சியாமலா,

துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் டென்சிங், உமாசங்கா், பணிமேற்பாா்வையாளா்கள் ராணி, சிற்றரசு, நஞ்சா ரெட்டி மற்றும் ஊராட்சி செயலாளா்கள், ஊரக வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT