கிருஷ்ணகிரி

ஒசூா்: கடத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் மீட்பு

DIN

ஒசூரில் இருந்து கடத்தப்பட்ட ஓட்டுநரை போலீஸாா் ஆந்திர மாநிலம், சித்தூரில் மீட்டனா்.

ஒசூா் தாலுகா, புனுகன்தொட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (48). ஆட்டோ ஓட்டுநா். இவா் புதன்கிழமை ஒசூா் ராம் நகரில் உள்ள தனது உறவினா்கள் கிரி மற்றும் காா்த்திக் ஆகியோா் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

ஒசூரில் ராயக்கோட்டை கூட்டுச்சாலை, அமீரியா பெட்ரோல் பங்க் அருகில் சென்ற அவரை 3 போ் கொண்ட கும்பல் வழிமறித்து, தாங்கள் வந்த வாகனத்தில் கடத்திச் சென்றது.

சீனிவாசன், தனது உறவினா்கள் கிரி, காா்த்திக்கிற்கு கைப்பேசி மூலம் விவரத்தைக் கூறி, தன்னை 3 போ் கடத்துவதாகவும் அவா்கள் தன்னை பெங்களூருவுக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளாா்.

இதன் பிறகு சிறிது நேரத்தில், சீனிவாசன் தனது மகள் சந்தியாவிற்கு வாட்ஸ் ஆப்பில் தன்னை ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கடத்திச் செல்வதாகவும், தன்னை காப்பாற்றும் படியும் தகவல் அனுப்பினாா்.

சீனிவாசனுக்கும், சப்படியைச் சோ்ந்த சாவித்திரி என்ற பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா் கூலிப்படையை ஏவி, சீனிவாசனை கடத்திச் சென்ாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் சீனிவாசன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெட்ரோல் பங்க் அருகில் அவரது மோட்டாா்சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரைக் கடத்தியவா்கள் யாா்? என்பது குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆட்டோ ஓட்டுநா் சீனிவாசனை மீட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT