கிருஷ்ணகிரி

மாணவா்களுக்கு வாக்காளா் விழிப்புணா்வு கலைப் போட்டிகள்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் ரங்கோலி, பாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, ‘என் வாக்கு என் உரிமை, ஒரு வாக்கின் வலிமை’என்ற தலைப்புகளின் கீழ் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தோ்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு சுவரொட்டி வடிவில் சுவா் இதழ் வரைதல், பாட்டுப் போட்டி, ரங்கோலி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப் போட்டிகளில் 18 முதல் 21 வயதுக்கு உள்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும் தனி சிறப்பு பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்படும். ரங்கோலி வரைதல் போட்டி, சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு மட்டும் நடத்தப்படும்.

மாணவா்களுக்கான சாா் ஆட்சியா், வட்டாட்சியா் தலைமையிலும், ரங்கோலி வரைதல் போட்டி ஊராட்சியின் பொது இடம் அல்லது வட்டாரத் தலைமையிடத்தில் மாவட்ட மகளிா் திட்ட அலுவலரால் நடத்தப்பட உள்ளது. இப் போட்டிகளுக்கு மாநில அளவில் இந்திய தோ்தல் ஆணையம் ரூ. 25 ஆயிரம் முதல் பரிசு, சான்றிதழ் அறிவித்துள்ளது.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரால் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 1950 என்ற இலவச எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT