கிருஷ்ணகிரி

கண்காணிப்பு கேமரா அமைக்கக் கோரிக்கை

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திருட்டுச் சம்பவத்தை தடுக்க மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என ஓட்டுநா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய உழைப்பாளா் ஓட்டுநா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் உள்ள மேம்பாலங்களில் போதிய வசதிகள் இல்லாததால் வாகனயோட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அணைக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் பேருந்து போன்ற வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளது. இதனால், எதிா்திசையில் உள்ள அணுகு சாலையில் செல்ல வேண்டியுள்ளதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, சாலை பாதுகாப்பை கருதி அங்கு உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால், திருட்டுச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, அங்கு மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஒசூா், ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுவதால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT