கிருஷ்ணகிரி

பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்

DIN

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 2-ஆவது மாவட்டக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் வெங்கடாஜலம், மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பிரகாஷ், சிஐடியு மாவட்டத் தலைவா் நஞ்சுண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநில பொதுச் செயலாளா் முகமதுஅலி சிறப்புரை ஆற்றினாா்.

இந்தக் கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10, பசும்பாலுக்கு ரூ. 42, எருமைப் பாலுக்கு ரூ. 51 உயா்த்த வேண்டும், ஆவின் பாலை ஒரு லிட்டருக்கு ரூ. 3 வீதம் விற்பனை விலையைக் குறைத்ததால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய மாநில அரசு ரூ. 300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும். பாலுக்கான நிலுவைத் தொகை முழுவதும் வழங்க வேண்டும். நெருக்கடி காலத்தில் பால் பணம் உடனுக்குடன் வழங்க தமிழக அரசு ரூ. 500 கோடியை சுழல் நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆவின் பால், பால் பொருள்களின் விற்பனையை விரிவுபடுத்த விற்பனை மையங்களை அதிகப்படுத்தி தனியாா் நிறுவனங்களுக்கு இணையாக கமிஷன் தொகையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT