கிருஷ்ணகிரி

உலக வன நாள் விழிப்புணா்வுப் பேரணி

21st Mar 2022 11:29 PM

ADVERTISEMENT

உலக வன நாளை முன்னிட்டு வனத்தை காப்போம், வன விலங்குகளைக் காப்போம் என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயினி தலைமை வகித்தாா். ஒசூா் கோட்டம், மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய விழிப்புணா்வு பேரணியில் வனத்துறை பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

வனத்தை காப்போம், வன விலங்குகளைக் காப்போம் என பதாகைகளை மாணவா்கள் கையில் ஏந்திச் சென்றனா். மாவட்ட வன அலுவலா் காத்திகேயினி மரக் கன்று நட்டாா்.

வனத்தில் வன விலங்குகளை யாரும் வேட்டையாட கூடாது. பசுமை நிறைந்த வனப்பகுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட வேண்டும் என மாவட்ட வன அலுவலா் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற உலக வன நாள் விழாவில் வனச்சரகா்கள் உள்ளிட்ட வனத்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT