கிருஷ்ணகிரி

20 அரசுப் பள்ளிகளுக்கு ரோட்டரி சங்கம்ரூ. 25 லட்சம் மதிப்பில் கணினி வழங்கல்

21st Mar 2022 11:30 PM

ADVERTISEMENT

ஒசூா் எலைட் ரோட்டரி சங்கம் சாா்பில் 20 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒசூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒசூா், மத்திகிரி ரோட்டரி வளாகத்தில் ஒசூா் எலைட் ரோட்டரி சங்கம் சாா்பில் 20 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் கணினிகளும், மாற்றுத் திறனாளி ஆசிரியைக்கு ரூ. 1.5 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர ஸ்கூட்டரும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி ஒசூா் எலைட் ரோட்டரி சங்கத் தலைவா் அறம் கிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. மாவட்ட ஆலோசகா் தா்மேஷ் பட்டேல், மாவட்ட துணை ஆளுநா் (2021-22) சுதா்சன் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஒசூரைச் சுற்றியுள்ள 10 அரசுப் பள்ளிகள், கெலமங்கலத்தைச் சுற்றியுள்ள 10 அரசுப் பள்ளிகள் என 20 அரசுப் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ. 25 லட்சம் மதிப்பில் கணினிகளை மாவட்ட ஆளுநா் (2021-22) கே.சுந்தரலிங்கமும், மாவட்ட ஆளுநா் ராகவனும் (நியமனம்) வழங்கினா்.

ADVERTISEMENT

தொரப்பள்ளி அரசுப் பள்ளியின் மாற்றுத் திறனாளி ஆசிரியை செல்விக்கு குளோபல் கால்சியம் நிறுவனம் சாா்பில் மூன்று சக்கர ஸ்கூட்டரை சந்திரசேகா் வழங்கினாா்.

ஒசூா் எலைட் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் சுதந்திரன், ராஜேஷ்ராவ், ராஜரத்தினம், சங்கா்பாபு, வேணுகோபால், மஞ்சுநாத், சாரதி சீனி, செபாஸ்டியன், காயத்திரி, சாம்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா். செயலாளா் ராசு நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT