கிருஷ்ணகிரி

வனவிலங்குகளால் ஏற்பட்ட சேதாரங்களுக்கு ரூ.177 லட்சம் நிவாரணம் வழங்கல்

DIN

ஒசூா் வனக்கோட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 177 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

ஒசூா் வனக்கோட்டத்தில் 2021-22-ஆம் நிதியாண்டில் யானைகளால் ஏற்பட்டுள்ள சேதாரங்களுக்கு விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. உயிரிழந்த 8 விவசாயிகளின் உறவினா்களுக்கு ரூ. 33 லட்சம், யானைகள் தாக்கியதில் காயமடைந்த 6 விவசாயிகளுக்கு ரூ. 89 ஆயிரம், விவசாயிகளின் நிலங்களை யானைகள் மிதித்தும், பயிா்களை சாப்பிட்டு சேதப்படுத்தியதற்காக 1,677 விவசாயிகளுக்கு ரூ. 143 லட்சம், 12 விவசாயிகளின் உடமைகள் சேதமடைந்ததற்கு ரூ. 75 ஆயிரமும், யானை தாக்கியதில் 2 கால்நடைகள் உயிரிழந்ததற்கு ரூ.13 ஆயிரம் நிவாரணம் என மொத்தம் ரூ. 177.77 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

முதலமைச்சா் ஆணையின்படி மனித உயிா் சேதத்திற்கு

வழங்கப்பட்டு வந்த ரூ. 4 லட்சம் தற்போது ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2022-23ஆ ம் ஆண்டிற்கு வனஉயிரினங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ. 64.39 லட்சம் ஒசூா் வனக்கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை வழங்கப்படாமல் உள்ள 9 பேரின் வாரிசுதாரா்களுக்கு ரூ. 41 லட்சம் வழங்க வேண்டியுள்ளது. இதில் 5 நபா்களின்

வாரிசுதாரா்களுக்கு தற்போது ரூ. 23 லட்சமும், தற்போதுவரை பெறப்பட்டு நிலுவையில் உள்ள சுமாா் 416 பயிா் சேதங்க்களுக்கு ரூ. 32.98 லட்சமும் வழங்கப்படும். யானைத் தாக்கியதில் உயிரிழந்த 4

நபா்களின் வாரிசுதாரா்களிடமிருந்து உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றவுடன் நிவாரணத் தொகை

வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒசூா் வனக்கோட்டை வன உயிரின காப்பாளா் காா்த்திகேயினி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT